Hinduism

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 டிசம்பர், 2009

சதுரகிரி புகழ் பாமாலை




மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே
சதுரகிரிவாழ் சித்தர்களுக்கு சேவைபுரிவோனே.....
மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே

சதுரகிரி வாரீர் மக்களே சதுரகிரி வாரீர்
லிங்க ஸ்வரூப தேவனைக் கண்டு
மனம் மகிழ வாரீர்.

மலையில் பல வித அற்புதங்களை நிகழ்த்தும் சித்தர்கள்
பல வித ரூபங்களில் நம்மை ஆட்கொள்ள வருவார்.....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

ஆசிர்வாத வினாயகரும் அன்பைப் பொழிவாரே
அன்பைப் பொழிந்து மலையேறவும் அனுமதி தருவாரே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

பக்தருக்கெல்லாம் யோகம் அருள்வாள் யோக காளியம்மன்
அவளை நாமும் தொழுது வணங்கி மலையேறுவோமே.....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

மலையடிவாரத்தில் காவல் புரியும் கருப்பசாமியே...
கருப்ப சாமிக்குத் துணையாய் நிற்கும் பேச்சியம்மனே.....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

அந்தக் காலத்தில் குதிரைகளெல்லாம் தாண்ட முடியாத
குதிரை ஊற்றைக் காண நீங்கள் மலையேறி வாரீர்

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

மலை வளம் கண்டு மனமும் நல்ல மகிழ்ச்சியடையும் பாரீர்
மகிழ்ச்சியின் எல்லையை அடையும் முன்னே வழுக்குப்பாறை வருமே......
மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையும் அங்கு உண்டு.....
பஞ்சாட்சரத்தின் துணையைக் கொண்டு கடக்க வேண்டுமே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

அத்திரி மகரிஷி அழகாய் அமைத்த வனமும் இங்கு உண்டு....
கோணலாகச் செல்லும் இடமே கோணத்தலைவாசல்....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

பசுவே வந்து பாலைச் சொரிந்து சிவனுக்களித்த இடம்....
காராம் பசுத்தடம் என்ற பெயரால் அழைக்கப்படுகிற்து.....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

காட்டற்று வெள்ளத்தை கோரக்க முனியும் கைகளால் தடுத்து......
கட்டுப்படுத்திய இடத்தில் அவரின் குகையைக் காணலாமே....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

ஹரிஹரன் என்ற பேதம் நீக்கி உண்மை உலகறிய....
சங்கர நாராயணராய் காட்சி அருளினாரே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

கணக்கற்ற மூலிகை கலந்த நன்னீர் நாவல் மரத்தடியில்
நாமும் கைகளால் அள்ளிப் பருகி நன்மையடையலாமே

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

மூலிகை வனத்தை முழுமையாய் அடைய நினைத்த அசுரர்களை
விரட்டி வனத்தைக் காப்பற்றவே வன காளி வந்தாள்

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......
பலாமரத்தின் நிழலில் நின்று காவல் புரியும் தெய்வம்......
பலாவடிக் கருப்பர் என்றே போற்ற்ப்படுகின்றார்.

தைலக் கிணற்றையும் ரசவாதத்தையும் வனத்தில் மறைத்துவைத்து காவல் செய்து வனத்தையும் இன்றும் காப்பாற்றுகின்றார்.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

அகத்திய முனியால் அன்பாய் இங்கு ப்ரதிஷ்டை செய்யப்பட்ட......
சுந்தரமூர்த்தி லிங்கத்தை நீங்கள் வணங்க வாருங்கள்....

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

தேவலோக மக்கள் செய்த தவற்றை உணர்த்தி இங்கு
சுந்தர மகாலிங்கமே வந்து மோட்சம் அருளினாரே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

லிங்க ரூப தேவியாய் வந்து சிவனை அடைந்த அம்மன்.
பக்தருக்கெல்லாம் மகிழ்ச்சி அருள்வாள் ஆனந்த வள்ளியம்மன்

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......


அர்த்தநாரிப் பட்டம் வேண்டி அன்னை தவமிருக்க
சந்தன மரத்தின் அடியில் லிங்க ப்ரதிஷ்டை செய்தாளே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

சக்தி சிவம் இரண்டும் ஒன்றே என்று வரமும் தந்தார்
தன் தேகத்தினில் உமையவளுக்கும் பாகம் தந்தாரே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......



கஜமுகனும் குருபரனும் அருகில் அமர்ந்திருக்க
சந்தன மகாதேவியாய் காட்சி தந்தாளே

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

நன்மை தீமை கலந்து அளிக்கும் நவக்ரஹங்களும்
நன்மையை மட்டும் அளிக்கும் குணத்தை இங்கு காணலாமே.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

சித்துக்கள் பல செய்யும் சித்தர்கள் இங்கு வீற்றிருந்து
சிவனை வணங்கி சிந்தையில் நிறுத்தி அருள் பெற்றனரெ.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......

பலவித மூலிகை பலவித அனுபவம் நாமும் உணரலாம்
ஒரு முறையேனும் மலையேறி அந்த உண்மையை உணரலாம்.

மலைவாசனே சிவநேசனே சதுரகிரியானே......
சதுரகிரி வாரீர் மக்களே சதுரகிரி வாரீர்
லிங்க ஸ்வரூப தேவனைக் கண்டு
மனம் மகிழ வாரீர்.



சதுரகிரியின் வாசா சங்கடங்கள் தீர்க்கும் நேசா
சதுரகிரியின் வாசா சங்கடங்கள் தீர்க்கும் நேசா
பூலோகக் கயிலையிலே பூரிக்கும் புவனேசா
பூலோகக் கயிலையிலே பூரிக்கும் புவனேசா
தேவ தேவ தேவ தேவ மஹாதேவா
தேவ தேவ தேவ தேவ மஹாதேவா...............
பதினாறு மலைகளிலே பவனி வரும் பினாகினா
பதினாறு மலைகளிலே பவனி வரும் பினாகினா
பவனி வரும் பினாகினா, பவனி வரும் பினாகினா
தேவ தேவ தேவ தேவ மஹாதேவா.......
தேவ தேவ தேவ தேவ மஹாதேவா....
சதுரகிரியின் வாசா சங்கடங்கள் தீர்க்கும் நேசா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக